LATEST NEWS
ஒரு நிமிட வாழ்த்து….! என் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம்….. தலைவர் பாராட்டியதை எண்ணி மகிழ்ந்த ஜெயம் ரவி….!!!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவியை ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டி பேசியுள்ளார். இதை ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்களாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
https://twitter.com/actor_jayamravi/status/1577276502244175872
இந்த திரைப்படத்தில் அருண்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அவரை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாவது “ஒரு நிமிட உரையாடல் எனது நாளை, எனது இந்த வருடத்தை என் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைக்கும், குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா, நீங்கள் திரைப்படத்தையும் எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும், ஆசீர்வாதமும் அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.