LATEST NEWS
“சூரியனுக்கே வியர்க்க வச்சிட்டாரு CM விஜய்” சூரியனை யாராலும் நெருங்க முடியாது பாஸ்… ஆளுங்கட்சிக்கு அவையிலேயே செக் வைத்த ஓ.பி.எஸ்..!!
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, இம்முறை எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ-க்களிடையே தொடர்ச்சியாகக் காரசாரமான விவாதங்களும் வார்த்தை மோதல்களும் அரங்கேறி வருகின்றன.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் தவெக அரசை விமர்சித்து உரையாற்றி வருகின்றனர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் விஜய், அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ் மோகன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் அவையில் காட்டமாகப் பேசி வருகின்றனர். இதனால் பேரவை வளாகம் தினமும் விவாதக் களமாகவே காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய தவெகவின் வேளாண் துறை அமைச்சர் வினோத், “இதுவரை அனைவருக்கும் சூரியனின் வெப்பத்தால் வியர்த்துக் கொண்டிருந்தது; ஆனால், நம் முதல்வர் விஜய் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, அந்தச் சூரியனுக்கே வியர்க்கத் தொடங்கிவிட்டது” என்று கவித்துவமாகவும் சுவாரசியமாகவும் பேசினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உடனே குறுக்கிட்டுப் பதிலளித்த முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய திமுக உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், “சூரியன் என்பது இதுவரை யாராலும் நெருங்க முடியாத உச்சத்தில் இருக்கிறது; எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளைக்கூடச் செலுத்த முடியவில்லை” என்று பதிலடி கொடுத்தார். அதிமுகவில் இருந்து விலகி தேர்தலுக்கு முன்பாகத் தம்மை திமுகவில் இணைத்துக் கொண்ட ஓ.பி.எஸ்ஸின் இந்த அறிவார்ந்த பேச்சு அவையில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
