CINEMA
பணம் சந்தோஷத்தை கொடுக்காது…. நடிகர் ஜெயம் ரவி சொன்ன கருத்து…. என்ன தெரியுமா…??

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஜெயம்ரவி, இந்நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பணம் சந்தோஷத்தை கொடுக்காது. ஆடம்பரமாக வாழவே பணம் தேவையே தவிர சந்தோஷமாக வாழ பணம் அவசியம் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒருவர் சந்தோஷமாக இல்லை என்றால் எவ்வளவு பணம் வந்தாலும் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று பேசியுள்ளார்.