LATEST NEWS
‘குக் வித் கோமாளி போட்டியாளர்’ சிவாங்கியின் அழகான குடும்ப புகைப்படங்கள்…
சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் ‘வித் கோமாளி சீசன்’. வித் கோமாளி சீசன்1முதல் 3 வரை கோமாலியாக கலக்கியவர் சிவாங்கி .
குக் வித் கோமாளியின் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி சீசன் 4’ போட்டியாளராக களம் இறங்கி கலக்கிக் கொண்டு வருகிறார்.
இவர் கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கிருஷ்ணகுமார் ஒரு தொழிலதிபரும் , பின்னணி பாடகர், தாய் பின்னி கிருஷ்ணகுமார் பின்னணிப் பாடகி. இவர்கள் இருவருமே கலைமாமணி விருது பெற்றுள்ளனர்.
இவருக்கு வினயக் சுந்தர் என்ற ஒரு தம்பியும் உள்ளார். சிவாங்கி பிறந்த பின் இவரது பெற்றோர்கள் சென்னைக்கு குடி பெயர்ந்தனர். இவர் சின்மயா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
சிவாங்கி எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரியில் Commerce இளங்கலை பட்ட படிப்பை முடித்தார். இவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 7’ போட்டியாளராக பங்கு பெற்று சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சில் கோமாலியாக கலக்கினார்.இந்த நிகழ்ச்சியின் மூலமாக ‘டான்’ படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இவர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த ‘நாய் சேகர் ரிட்டன்’ என்ற படத்திலும் கசேதன் கடவுலடா, என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து இவர் ‘ஷாட் பூட் 3’ பற்றிய என்ற படத்தில் விருந்தினராக நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாக வில்லை. அதை தொடர்ந்து அன்புள்ள-உ சகோதரர்-உ, உனக்கு ஒரு தங்கை இருக்கும்போது!, போன்ற youtube தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் பசங்க, முருங்கைக்காய் சிப்ஸ், என்ன சொல்லப் போகிறாய், சினம், மாயன், சஞ்சீவன் போன்ற பல படங்களில் பாடியுள்ளார். இவர் youtube ல் வெளியான சொல்ல மாட்டேன் போ, அஸ்கு மாரோ, அடிபொலி,
வெண்ணிலவும் பொன்னி நதியும், மௌனமாய், NO NO போன்ற ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
