CINEMA
ஜெயம் ரவி எப்படிப்பட்டவர் தெரியுமா…? உண்மையை உரக்க சொன்ன காஸ்டியூம் டிசைனர்….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜெயம் ரவியின் காஸ்ட்யூம் டிசைனர், ஜெயம் ரவி நடித்த போகன் திரைப்படத்தில் தான் காஸ்டியூம் டிசைனராக அறிமுகமானேன்.
அதன் பிறகு திருட்டுப் பயலே,2 இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளேன். ஜெயம் ரவியின் விவகாரத்து அவர்கள் இருவர்களின் தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பான எந்தவித கருத்தையும் கூற விரும்பவில்லை. தொழில் ரீதியாக ஜெயம் ரவி பொறுத்தவரையில் அவர் நல்ல மனிதர். அனைவரிடமும் அன்பாக பழகுவார். அவரிடம் இணைந்து பணியாற்றிய முதல் நாளே அவருடைய நல்ல குணம் எனக்கு புரிந்து விட்டது என்று கூறியுள்ளார்.