LATEST NEWS
மனைவி இறந்த சோகத்திலும் சாதனை புரிந்த பிரபல நகைச்சுவை நடிகர் ?..30 மேற்பட்ட விருதுகள் !…பிறநாடுகளிலிருந்து குவிந்து வரும் பாராட்டுக்கள் ….

சோகங்கள் இருந்தும் விட முயற்சியால் ஜெயித்து காட்டியவர் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து. சின்னத்திரையை பொறுத்தவரை நகைச்சுவை கலைஞர்களில் மறக்க முடியாத நபர் மதுரை முத்து.கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.தொடர்ந்து சினிமாவில் நடித்தாலும் பெரிய அளவில் ஜொலிக்காவிட்டாலும் தொடர்ந்து சின்னத்திரையில் அசத்தி வருகிறார்.இவருடைய நகைச்சுவையை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது, அந்த அளவுக்கு சரியான நேரத்தில் சரியான நகைச்சுவை துணுக்கை கூறி அனைவரையும் தன்பக்கம் ஈர்க்கும் திறனுடையவர்.
இவரது முதல் ரசிகை யார் என்றால் அது முதல் மனைவி லேகா என்ற வையம்மாள் தானாம், கல்லூரி நிகழ்ச்சியொன்றில் லேகாவை சந்தித்த போது, இருவருக்குள்ளும் காதல் மலர திருமணம் செய்து கொண்டனர். இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையாகி வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் புயலால் அடித்தது அந்த சோக நிகழ்வு.அமெரிக்காவில் இருந்த முத்துக்கு அம்மை போட, காளி மீது பக்தி கொண்ட லேகா கணவருக்காக வேண்டிக்கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் லேகா இறக்க, அதிர்ச்சியில் உறைந்து விட்டார் முத்து, 2016ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் முத்துவின் வாழ்க்கையை புரட்டி போட்டது.
எதுவும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தார். தான் லேகாவின் தோழியான நித்து என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.தன்னுடைய குழந்தைகளுக்காக தங்களை பற்றி நன்கு தெரிந்த பெண்ணை மணந்தார், இவர்களுக்கு ஓர் ஆண்பிள்ளை இருக்கிறது.இவருடைய நகைச்சுவை திறமையை அங்கீகரித்து அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலிருந்து விருதுகள் குவிய இதுவரையிலும்30க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.