LATEST NEWS
பல வருடங்களுக்குப் பிறகு 96 பாணியில்.. பள்ளி நண்பர்களை நேரில் சந்தித்த தனுஷ்… இணையத்தில் வைரலாகும் School Reunion புகைப்படம்..!!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.
சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் திருப்பதி சென்று தனுஷ் மொட்டை போட்டதும் ஜெயிலர் திரைப்படத்திற்கு முதல் நாளை வந்த போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய பள்ளிப்பருவ நண்பர்களே சந்தித்துள்ளார். School reunion நடந்த நிலையில் தனுஷ் அதில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.