LATEST NEWS
‘தர்ஷனுடன் காதல் முறிவு’ : ஆம்..! “முதன் முறையாக ஓப்பனாக பேசிய” பிக்-பாஸ் ஷெரின்…!

நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்-3 கலந்து கொண்ட நாயகி ஷெரின் அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான தர்ஷனுடன் காதல் வயப்பட்டு இருவருமே காதலித்து வந்ததாக கூறிவந்தனர். பின்னர் பிக் பாஸ் வீட்டில் வணித்தவுடன் ஏற்பட்ட சண்டையில் ஷெரின் கூறியது தர்ஷனும் நானும் நட்பாக தான் பழகி வருகிறோம் என்று கூறினார்.
பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தர்ஷன் மீது ஷனம் ஷெட்டி காவல் நிலையத்தில் பரப்பரப்பு புகார் அளித்தார். அதில் தர்ஷனும் நானும் காதலித்து வந்தோம் ஆனால் தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறுகிறார் என்று புகார் அளித்தார். இந்த காதல் முறிவுக்கே ஷெரின் தான் காரணம் என்று தகவல் பரவியது.
இந்தநிலையில் ஷெரின் கூறியது : கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே என்னை பற்றி பல்வேறு மாதிரியாக பேசிவருகிரிகள். அதை பற்றி நான் ஏதும் பேச விரும்பவில்லை மேலும் என்னுடன் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.
அதில் கூறியது யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் , மேலும் இரண்டு பேர் காதல் பிரிவைவிட உலகில் பல பிரச்சனைகள் உள்ளது அதை பற்றி பேசுங்கள் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.