CINEMA
“உடனே கிளம்பி வா” இந்த வியாக்கியானம் எல்லாம் பேசாத… நடிகை சங்கீதாவை அழைத்த இயக்குனர் பாலா…!!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்தான் பாலா. இவர் கடந்த சில வருடங்களாகவே சினிமா வாழ்க்கையில் கொஞ்சம் தடுமாறிக் கொண்டுதான் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தற்போது பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் “வணங்கான்” படத்தை நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பாலா குறித்து பேசி சங்கீதா பேசுகையில், பிதாமகன் வெளியாகிய காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன்.
கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் என்னுடைய கைகளில் இருந்தது. ஆனால் தமிழ் சினிமாவில் எனக்கு பெரிதாக டச் இல்லாமல் இருந்தது. பிதாமகன் படத்தில் நடிப்பதற்காக பாலா என்னை அழைத்தார் . அந்த சமயத்தில் நான் பாலகிருஷ்ணா படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாலா சொன்ன அந்த கேரக்டரில் வேறு ஒரு ஹீரோயின் நடித்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.
அவருடைய வேலை கிடைத்து எனக்கு வேலை வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இயக்குனர் பாலா, “இந்த வியாக்கியானம் எல்லாம் நான் உன்கிட்ட கேக்கல.. உடனே கிளம்பி வா என்று கூறினார். அதன் பிறகு தான் பிதாமகன் படத்தில் நடித்தேன் என்று நடந்ததை ஓபன் ஆக பேசியுள்ளார்.