CINEMA
பிக்பாஸ்-8 இந்த புதிய போட்டியாளர் யார் தெரியுமா…? அவருடைய சிபாரிசா…? வெளியான தகவல்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் திடீரென்று கமலஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால்இதிலிருந்து விலகி உள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி அல்லது நயன்தாரா தொகுப்பாளராக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டது .இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரிடம் முதல் கட்டமாக சேனல் தரப்பில் இருந்து பேசியுள்ளார்களாம். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி டைட்டில் வின்னர் அர்ச்சனாவும், அருணும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாகவே சர்ச்சை எழுந்து வருகிறது. ஆனால் இருவருமே அவர்கள் தரப்பில் மறுக்கவில்லை.