CINEMA
ராஜ் கிரண் சார் அழுததை பார்த்து நாங்க எல்லோரும் அழுதோம்…. இயக்குநர் பிரேம்குமார் ஓபன் டாக்…!!

பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் நடித்தனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தபோது படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சனம் வந்தது.
இதனால் படக் குழுவினர் காட்சிகளை கொஞ்சம் கட் செய்தனர். முதல் நாளிலிருந்து படத்திற்கான நல்ல வசூல் தான் என்றே சொல்லலாம். இந்நிலையில், மெய்யழகன் ஷூட்டிங் எடுக்கும் பொழுது ராஜ் கிரண் சார் அழுதா நாங்க எல்லோருமே அழுது விடுவோம். ஒரு தனி மனிதன் அழுது அனைவரையும் அழ வைப்பது என்பது என்னை பொருத்தவரை பெரிய விஷயம் என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.