LATEST NEWS
நடிகர் விஜய் மூன்று வேலையும் என்ன சாப்பிடுவார் தெரியுமா?…. அவரின் டயட் பிளான் இதுதான்….!!!!

தமிழ் சினிமாவில்முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும் 7 நாட்களில் 210 கோடியும் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், ஜெயசுதா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்நிலையில் பிரபல சேனலுக்கு வாரிசு திரைப்படத்தின் படக்குழுவினர் பிரத்யேக பேட்டி ஒன்றை அழித்தனர். அப்போது நடிகர் விஜயின் டயட் பிளான் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஷாம் மற்றும் வம்சி, விஜய் அண்ணன் காலையில் பொங்கல், இரண்டு பூரி, மதியம் சப்பாத்தி, சிக்கன், கொஞ்சம் சாதம், மாலையில் மூடு நல்லா இருந்தா சாதம் இல்லை என்றால் சப்பாத்தி சாப்பிடுவார்.
அவர் இயல்பாக சாப்பாடு இதுதான். ப்ரொடக்ஷன் வரும்போது அளவாக சாப்பிடுவார். விஜய் அண்ணா மாதிரி அளவா சாப்பிட்டா அவர் மாதிரி இருக்கலாம். உணவு விஷயத்தில் அவர் ரொம்ப தெளிவானவர் என்று கூறியுள்ளனர்.