LATEST NEWS
இன்டர்நேஷனல் லெவலில் தனுஷ் கட்டிய வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?…. கேட்டா ஆடி போயிருவீங்க….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்திதிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு உலக அளவில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆகச் சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனுஷ் பல கோடிகள் செலவு செய்து சென்னை போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்தார். அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் புது வீட்டுக்கு தனுஷ் சென்ற நிலையில் கிரகப்பிரவேசத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சுமார் 25 கோடி செலவில் சென்னை போயஸ் தோட்டத்தில் 8 கிரவுண்ட் அளவிலான நிலம் ஒன்றை தனுஷ் வாங்கினார். நான்கு தளம் கொண்ட இந்த வீட்டை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகராக தனுஷ் டிசைன் செய்துள்ளார்.
அதில் பிரம்மாண்ட நீச்சல் குளம், ஒரு ஆடம்பர உட்புற விளையாட்டு திடல், ஹோம் தியேட்டர்,உடற்பயிற்சி கூட மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சர்வதேச அளவில் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்ட தனி அறை உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தனுஷ் வீட்டை இன்டர்நேஷனல் அளவில் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.