தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்திதிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு உலக அளவில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆகச் சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனுஷ் பல கோடிகள் செலவு செய்து சென்னை போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்தார்.

அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று தனுஷ் புது வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

அங்கு கிரகப்பிரவேசத்தில் அவரின் அப்பா அம்மா என குடும்பத்தினர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தனுஷ் வீட்டை மிகவும் பிரம்மாண்டமாக கட்டி உள்ளார் என்று கூறி வருகின்றனர்.