LATEST NEWS
வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு…. விஜய்யின் மனைவி ஏன் வரவில்லை தெரியுமா?…. உண்மை காரணம் இதுதான்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் விஜய். இவர் தற்போது வம்ச இயக்கத்தின் வாரிசு திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சன் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொதுவாக விஜயின் எந்த ஒரு பட நிகழ்ச்சி என்றாலும் அதில் அவரின் மனைவி சங்கீதா கலந்து கொள்வார். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக செல்வது வழக்கம்.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற அட்லி மற்றும் பிரியாவின் வளைகாப்பு விழா மற்றும் வாரிசு வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா வரவில்லை. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து செய்ய பிரிய உள்ளதாக பல செய்திகள் உலா வந்த நிலையில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சங்கீதா வராமல் இருந்ததை வைத்து பல செய்திகள் உலா வந்தன. ஆனால் உண்மையிலேயே அவர் வராததற்கு அவர்களின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா அங்கு இருந்து வருவதால் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
