LATEST NEWS
நடிகை திரிஷாவின் 3-ம் வகுப்பு ரிப்போர்ட் கார்டை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் திரிஷாவின் பள்ளி பருவ புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன. அவ்வகையில் தற்போது மூன்றாம் வகுப்பு ரிப்போர்ட் கார்டு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது பழைய புகைப்படம் என்றாலும் அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் திரிஷா எவ்வளவு க்யூட்டா இருக்காங்க எனக் கூறி அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
