LATEST NEWS
நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்.. என்ன காரணம் தெரியுமா..? இணையத்தில் வெளியான தகவல்..!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. சுமார் 35 வருடங்களுக்கு பிறகு தற்போது மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமலின் ராஜ் கமல் நிறுவனம், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் வைத்து ஷூட்டிங் நடைபெற்றது. அடுத்த கட்ட படபிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் செர்பியாவில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிலையில் தக் லைஃப் படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலங்கியதாக தகவல் பரவியது. இதுகுறித்து பேசிய துல்கர் சல்மானின் செய்தி தொடர்பாளர் அந்த செய்தி உண்மைதான்.
தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகிவிட்டார். மற்ற படத்தின் ஷூட்டிங் தேதிகளுடன் தங்களை படத்தின் ஷெட்யூல் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால் தக் லைஃப் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் துர்க்கர் சல்மான் தக் லைஃப் படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறியுள்ளார். சூர்யா 43, காந்தா, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் துல்கர் சல்மான் பிசியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.