LATEST NEWS
BIG BREAKING: பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறார் எடப்பாடி..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில், அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்த அதிமுக 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சிக்குள் தீவிர அதிருப்தி நிலவி வருகிறது. இதனால், அவரது தலைமைப் பதவிக்கு எதிராகப் புதிய சவால்களும் குரல்களும் அதிமுகவிற்குள் மீண்டும் வலுக்கத் தொடங்கியுள்ளன.
இந்தத் தோல்விக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சென்னையில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கடந்த கால முடிவுகள் மற்றும் தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிக்க, உடனடியாகக் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று இந்த அதிருப்தியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்ட மறுத்தால், கட்சியின் கட்டமைப்பு மற்றும் விதிகளைப் பயன்படுத்தி தங்களின் கோரிக்கையை முன்னோக்கி நகர்த்துவது குறித்தும் இந்த அணியினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைத் தங்களுக்குச் சாதகமாகத் திரட்டி, பொதுக்குழு மற்றும் செயற்குழு மூலம் தலைமைப் பொறுப்பில் மாற்றத்தைக் கொண்டு வர எஸ்.பி.வேலுமணி தலைமையிலான குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
