தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் தான் பாலா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அந்தத் திரைப்படத்தில் இவர் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன் பிறந்த தம்பி. இந்நிலையில் பாலாவிற்கு சமீபத்தில் கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாலா தனது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். அதன் பிறகு ரசிகர்களிடம், உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தற்போது நான் மீண்டு வந்துள்ளேன்.

இன்னும் இரண்டு நாட்கள் கழித்து முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று உள்ளது. இந்த சிகிச்சையின் போது என்னுடைய உயிர் கூட போகலாம். ஆனால் உங்களின் பிரார்த்தனையால் பிழைத்துக் கொள்ள நிறைய வாய்ப்புள்ளது என உருக்கமாக பாலா கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.