விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது பெரியவர்களுக்கான ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 10 பைனல் லிஸ்ட் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் தினேஷ் அவரின் அம்மாவுடன் விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக சூப்பர் சிங்கர் நடுவர்கள் கூறியிருந்தனர்.
அதன்படி தினேஷ் மற்றும் அவரின் அம்மா இருவரும் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க