LATEST NEWS
காலையிலேயே சோகம்..! முன்னாள் PM தேவகவுடாவின் மனைவி மாரடைப்பால் காலமானார்..!!
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் மனைவி சென்னம்மா (89), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாகக் காலமானார். மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நெஞ்சு நெரிசல் போன்ற வயது முதிர்வு சார்ந்த உடல்நலக் குறைபாடுகள் காரணமாக, அவர் கடந்த புதன்கிழமை இரவு பெங்களூரு ஓல்டு ஏர்போர்ட் சாலையில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 4 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, எம்.எல்.ஏ ஹெச்.டி.ரேவண்ணா உள்ளிட்ட 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்குத் தாயாரான சென்னம்மா, தனது குடும்பத்தை மிகச் சிறந்த முறையில் கவனித்து வந்தார். பிரபல அரசியல் தலைவர்களின் மனைவியாகவும் தாயாகவும் இருந்தபோதிலும், அவர் எப்போதும் பொதுவெளியில் விளம்பரங்களைத் தவிர்த்து, தேவகவுடாவின் நீண்ட அரசியல் பயணத்திற்குப் பின்னணியில் இருந்து உறுதுணையாக விளங்கினார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
