LATEST NEWS
பிரான்சில் பிரதமர் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் மாதவன்… வெளியான புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது.
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இதனிடையே மாதவனுக்கு வேதாந்த் மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர் என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் ராணுவம் அல்லது பொது மக்களுக்கு சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவம் ஆகும். இதன் மூலமாக இந்த பெருமையை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இந்த விருது வழங்கும் விழா எலிசி அரண்மனையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.