CINEMA
கிராமத்து கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்…. நடிகர் ஹரீஷ் கல்யாண் ஓபன் டாக்…!!

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றி குறித்து பேசிய ஹரீஷ் கல்யாண், “ஒரு நல்ல வெற்றிப் படத்துக்காக ரொம்ப நாட்கள் நான் காத்து கொண்டு இருந்தேன். அது இப்போது நடந்து இருக்கிறது. கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். படத்தை ரசிகர்கள் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றியை இதயத்தில் வைத்து இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.