தமிழ் சினிமாவில் யாராலும் ஈடு செய்ய முடியாத அளவிற்கு இடம் பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் நடிகை மனோரமா. இவரை பலரும் ஆட்சி என்று தான் அழைப்பார்கள். காமெடியில் அப்படி ஒரு கலக்கு கலக்கியவர். சினிமா திரை உலகில் பெண் நடிகைகளின் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மாபெரும் சாதனை படைத்த பெருமை இவருக்கே சேரும்.

இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்காத இடம் பிடித்துள்ளன. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவரின் மரணம் தமிழ் திரை உலகில் பேரிழப்பை ஏற்படுத்தியது. இவர் ராமநாதன் என்பவரை 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து பிறகு சில காரணங்களால் 1966 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

இவர்களுக்கு பூபதி என்ற ஒரு மகனும் உள்ளார். குடும்பம் ஒரு கதம்பம் என்ற திரைப்படத்தில் பூபதி நடிகராக அறிமுகமான நிலையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் பல சோதனைகளை சந்தித்துள்ளார். தற்போது மனோரமா தனது மகனுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.