தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். திருமணமான காரணத்தினால் தனது கரியருக்கு சற்று பிரேக் விடுத்தார். கணவன் மற்றும் குழந்தைக்காக நேரத்தை செலவிட்டார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் விவாகரத்து ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. தற்போது இவருக்கு கேசர் என்ற மகன் ஒருவர் இருக்கிறார்.
இவர் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் விஜே மகேஸ்வரி தன்னுடைய மகனின் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thank you for being a warrior!!! My boy .. Iam sure your gonna make this world filled with toxic masculinity a better world for women . You I’ll be the change and Iam proud of it 😍 mom will protect you .Note:complaint will be filed and legal action will be taken shortly 🙏 pic.twitter.com/HOo1RsaAuK
— Vj_Maheswari (@maheswarichanak) February 6, 2023