CINEMA
“ஹண்டர் வந்துட்டார்”….. Vibe ஏத்தும் ‘வேட்டையன்’ 2ஆவது சிங்கிள்…. இதோ வீடியோ…!!

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது . இந்நிலையில் படத்தின் 2ஆவது பாடல் மேக்கிங் வீடியோவை அனிருத் பகிர்ந்துள்ளார். வரும் 20ஆம் தேதி பாடல் ரிலீஸ் ஆக உள்ளது. ‘ஜெயிலர்’ படத்தில் வரும் ‘அலப்பறை கிளப்புறோம்’ பாடலைப் போல இந்த பாடலும் சூப்பர் ஸ்டாரை புகழ்வது போன்று அமைந்துள்ளது. ஏற்கனவே வெளியான ‘மனசிலாயோ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
#HunterVantaar , next song from #Vettaiyan from day after
Superstar @rajinikanth @tjgnan @LycaProductions @SonyMusicSouth
@siddharthbasrur
️ @Arivubeing pic.twitter.com/13QxZ9sVth— Anirudh Ravichander (@anirudhofficial) September 18, 2024