CRIME
எப்படித்தான் மனசு வருதோ..? 3 குழந்தைகளுக்குத் தந்தை.. 5 குழந்தைகளுக்குத் தாய்.. நடுத்தெருவில் அனாதையாக நிற்கும் 8 பிள்ளைகள்… டாட்டா காட்டிட்டு ஓட்டம் பிடித்த கள்ளக்காதல் ஜோடி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், கர்வா சௌத் பண்டிகைக்கு முன்பாக 5 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், 3 குழந்தைகளுக்குத் தந்தையான தன் காதலனுடன் குடும்பத்தை தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நவாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அமித் குப்தா என்ற விற்பனையாளருக்கும் (Salesman), ஐந்து பிள்ளைகளின் தாயான நீலம் என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு ரகசியமாக வெளியேறியுள்ளனர்.
அவர்கள் இருவரும் தங்களது வீடுகளில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், இவர்களை நம்பியிருந்த மொத்தம் 8 அப்பாவிப் பிள்ளைகள் தங்களின் பெற்றோர் தங்களை தவிக்கவிட்டுச் சென்றதால் நடுத்தெருவில் நின்று அழுதுகொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் பராமரிப்பும், அவர்களின் படிப்பும் தற்பொழுது முற்றிலும் முடங்கியுள்ளதாகக் கண்ணீர் மல்கக் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அமித் குப்தாவின் மனைவி அனிதா தேவியும், நீலமின் கணவரான அமித் குமாரும் தங்களது துணைகளை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். தப்பியோடிய இருவரின் கைபேசிகளும் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் தனிப்படை அமைத்துத் தலைமறைவாக உள்ள காதல் ஜோடியைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
