“முகத்தில் லிப்ஸ்டிக்… உடலில் சிகரெட் சூடு” தலைமைச் செயலகப் பாஸ் ஒட்டப்பட்ட ஆடி காரில் வந்தது யார்..? 4-வது மாடியில் இருந்து இன்ஃப்ளூயன்சர் தள்ளிக் கொலை? காதலி மீது பகீர் குற்றச்சாட்டு!! – cinefeeds
Connect with us

CRIME

“முகத்தில் லிப்ஸ்டிக்… உடலில் சிகரெட் சூடு” தலைமைச் செயலகப் பாஸ் ஒட்டப்பட்ட ஆடி காரில் வந்தது யார்..? 4-வது மாடியில் இருந்து இன்ஃப்ளூயன்சர் தள்ளிக் கொலை? காதலி மீது பகீர் குற்றச்சாட்டு!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் கேஃபே மற்றும் சிக்கன் கடை நடத்தி வந்த சிவா சர்மா (27) என்பவரின் சந்தேக மரணம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள அவத் கிரீன் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தற்போது போலீஸ் விசாரணையில் வெளியாகி வருகின்றன.

சிவா சர்மாவின் உடலைக் கைப்பற்றி நடத்தப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது உடலில் 10 கடுமையான காயங்கள் மற்றும் சிதைவுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது முகத்தில் லிப்ஸ்டிக் தடவப்பட்டு, உடல் அத்தெரிந்த ஆடைகளுடன் இருந்ததும், உடலில் சிகரெட்டால் சுடப்பட்ட தழும்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலைச் சம்பவத்திற்கு அவரது லிவ்-இன் பார்ட்னரும் (Live-in partner) சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சருமான ஷ்ரத்தா துபே மற்றும் அவரது தோழிகளே காரணம் என சிவாவின் தாய் ரஞ்சனா சர்மா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

போலீசார் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, விபத்து நடந்த அடுத்த 15 நிமிடங்களில் தலைமைச் செயலகப் பாஸ் ஒட்டப்பட்ட ஒரு வெள்ளை நிற ஆடி கார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. முற்காலத்தில் சிவா சர்மா மீது குற்றப் பின்னணி இருந்ததை வைத்து, அவரது பார்ட்னர் ஷ்ரத்தா துபே அவரைத் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஹசரத்கஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in