நம் ஆர்.ஜே பாலாஜியா இது?…. என்ன ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரு…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நம் ஆர்.ஜே பாலாஜியா இது?…. என்ன ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரு…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல வானொலியில் பணியாற்றி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் குரலுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற படம் பின்னணியில் பேசி தனது பயணத்தை தொடங்கினார்.

பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் கிட்டதட்ட 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

Advertisement

முதன்முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு எல்கேஜி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய இவர் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பக்கம் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் கிரிக்கெட் பணியிலும் தொடர்ந்து வேலை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது என குறிப்பிட்டு ஆர் ஜே பாலாஜி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அதில் அவர் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in