LATEST NEWS
ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கு?.. இவ்வளவுதான் படத்தின் கதையா?… ரசிகர்கள் விமர்சனம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
திரைப்படத்தில் போலீஸ் மகன், குறும்புக்கார பேரன் மற்றும் ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினி. இப்படியான நிலையில் சிலை கடத்தல் பிரச்சனை ஒன்றில் ரஜினியின் மகன் கேங்ஸ்டர் ஒருவரை பொளந்து கட்டுகிறார். இதனைப் பார்த்து கொதித்து எழுந்த கேங்ஸ்டர் தலைவன் ரவியை கொன்று விட்டதாக காட்சிப்படுத்தப்படும் நிலையில் இதனைக் கேட்டு நொந்து போன ரஜினி தனது பழைய முகத்தை மீண்டும் காட்டுகிறார்.
இறுதியாக கேங்ஸ்டர் தலையை வெட்டுவதற்கு ரஜினி செல்லும்போது கடைசி நொடியில் ரஜினியின் மகன் உயிருடன் இருக்கிறார் என்று செய்தி அவருக்கு கிடைக்கின்றது. ஆனால் மகனை திரும்ப ஒப்படைப்பதற்கு கேன்சர் ரஜினியிடம் டீல் ஒன்றை பேச அதனை செய்து முடிக்க களத்தில் ரஜினி இறங்குகின்றார்.
அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் நீதி கதை. அவருக்கு அடுத்ததாக வில்லன் விநாயகன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதில் சுனிலுக்கு மற்றும் சற்று வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல அதிரடி ஆக்சன் நிறைந்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்துள்ளது. சில இடங்களில் படம் தூய்மை கொடுத்தாலும் நெல்சன் இந்த முறை ரசிகர்களை முழுமையாக ஏமாற்றவில்லை.