Uncategorized
ஜல்லிக்கட்டில் நடந்த சோகம்? பிள்ளையை போல வளர்த்தேன் என கதறி அழுத காளையின் உரிமையாளர்!!!

காளை ஒன்று மின்கம்பத்தில் தவறி கால் வைத்து உயிர் இழந்த சம்பவம்.சோகத்தை ஏற்படுத்தியது …
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் புனித பெரியநாயகி ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் செங்களாகுடியைச் சேர்ந்த அன்பு என்பவர் காளை ‘செவலை’ அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது மாடுபிடி வீரர்களிடம் காளை சிக்காமல் களத்தைவிட்டு வெளியே ஓடி வந்தது. இதனை அடுத்து மாட்டை பிடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல அதன் உரிமையாளர் முயற்சி செய்தார்.
ஆனால் யாரிடமும் சிக்காமல் துள்ளி குதித்து காளை மேலப்பட்டி அருகே உள்ள வயல்வெளிக்குள் நுழைந்தது. அங்கு வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியில் காளை எதிர்பாராதவிதமாக தவறி கால் வைத்தது. மின்சாரத்தில் கால் வைத்த காளையின் மீது மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்டது. இதில் படுகாயமடைந்த காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
கண்முன் பார்த்த அதன் உரிமையாளர், பிள்ளையைப்போல் வளர்த்த காளை உயிரிழந்துவிட்டதே என கதறி அழுததைப் பார்த்த கிராம மக்கள் இடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.