Uncategorized
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி…? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…?
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல ஆயிரம் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். சீனாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்துள்ளார். 3000 பேர் இறந்தும், 6000 தீவிர சிகிச்சையிலும் உள்ளனர். மேலும் இந்தியா போன்ற பல்வேறு உலக நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த ஒரு சூழலில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசும் பல்வேறு நடவடிகைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் மற்ற இருவருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சற்று முன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
மேலும் 700 பேருக்கு கொரோனா மாதிரி ரத்த பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதில் ஒருவரை தவிர மற்ற அனைவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
தமிழகத்தின் வெப்பநிலைக்கு கொரோனா வைரஸ் தாக்க அதிக வாய்ப்பில்லை என்பது ஒரு நிம்மதியான செய்தியாகும்
