CINEMA
ஜெயம் ரவி ரொம்ப கோபப்படுவான்…. என் மருமகளை ரொம்ப பிடிக்கும் – ஜெயம் ரவியின் அம்மா எமோஷனல்…!!!!

ஜெயம் ரவியின் அம்மா சில மாதங்களுக்கு முன்பாக அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் இரண்டு மகன்களும் மருமகள்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இரண்டு பேருமே திறமையானவர்கள் தான். என்னுடைய மூத்த மருமகள் ரொம்பவும் பாசமானவர். அதுபோல இரண்டாவது மருமகள் ஆர்த்தியும் வெளிநாட்டில் படித்திருக்கிறார். இரண்டாவது மகன் ஜெயம் ரவி ரொம்பவும் ஒர்க்அவுட் பண்ணுவான்.
அதனால் அவர்களை பார்க்கும்பொழுது என்னடா இளைச்சு போயிட்ட என்று கேட்டால் என்னுடைய இரண்டாவது மகன் ஜெயம் ரவி ரொம்பவே கோபப்படுவான். என்னுடைய மகன்கள் எப்பொழுதும் வெளியே போகும்போது எங்களிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தான் வெளியே போவார்கள். எந்த கஷ்டத்திலும் எங்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று ரொம்பவுமே யோசிப்பார்கள் என்று எமோஷனலாக பேசி உள்ளார்.