CINEMA
அடக்கடவுளே கனகாவா இது…? எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்களே…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை கனகா. அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் பட புகழ் கனகா என்றால் அனைவருக்கும் தெரியும். ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு கொண்டாடப்பட்ட படம்தான் கரகாட்டக்காரன். இந்தத் திரைப்படத்தில் வரும் வாழைப்பழம் காமெடிக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த திரைப்படத்தை தவிர கனகா தங்கமான ராசா, கோவில் காலை, அதிசய பிறவி மற்றும் விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தற்போது சென்னையில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நடிகை கனகா ஷாப்பிங் மாலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது எப்படி இருந் கனகா இப்படி ஆகிட்டாங்களே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.