CINEMA
என்னால் அதை மறக்கவே முடியல…. தினம் தினம் நினைத்து கலங்குகிறேன்…. கீர்த்தி சுரேஷ் உருக்கமான பதிவு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழி படங்களிலுமே பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். கடைசியாக தமிழில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சோகமான பதிவு ஒன்றே போட்டுள்ளார்.
அதில் என்னுடைய நெருங்கிய தோழி, மனிஷா brain tumour நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார் .அவருடைய இழப்பு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு சரியாக 21 வயதில் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த எட்டு வருடங்களாக இந்த நோயுடன் அவள் போராட்டம் நடத்தினாள். கடைசியாக அவளை மருத்துவமனையில் தான் சந்தித்தேன். என்னால் தாங்கவே முடியவில்லை. எதுவும் கூறாமல் வெளியில் வந்து விட்டேன். நீ இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் உன் நினைவு வராத நாளே இல்லை என்று உருக்கமாக பகிர்ந்து உள்ளார்.