CINEMA
“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்தார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தமிழ் பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
பொதுவாக ஐபிஎல் போட்டி அணிகளின் நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாக செயல்பட்டு வருவது போல கேரள மாநிலம் திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக நடிகை கீர்த்தி சுரேஷ் மாறி அசத்தியுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய அணியின் முதல் வெற்றியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.