இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஷித் ஜோடியாக நடிக்க முதலில் கமிட் ஆனது அந்த மலையாள நடிகையா? அடடா சூப்பர் காம்பினேஷன் மிஸ் ஆயிடுச்சே? – புலம்பும் ரசிகர்கள்! – cinefeeds
Connect with us

CINEMA

இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஷித் ஜோடியாக நடிக்க முதலில் கமிட் ஆனது அந்த மலையாள நடிகையா? அடடா சூப்பர் காம்பினேஷன் மிஸ் ஆயிடுச்சே? – புலம்பும் ரசிகர்கள்!

Published

on

Actress Krithi Shetty

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஷங்கரின் மகன் அர்ஷித் ஷங்கரும் படத்தில் நடிக்க வந்துவிட்டார். ஏஆர் முருகதாஸ் மணிரத்னம் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக சில காலம் பணிசெய்தவர் அர்ஷித். ஷங்கர் இயக்கிய படங்களிலும் அவர் உதவியாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஷித் லவ்வர் பாய் என்ற புதிய படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லியிடம் பல படங்களில் பணிசெய்த உதவி இயக்குனர் ஒருவர்தான் டைரக்ட் செய்கிறார். இந்த படம் மொத்தம் ரூ. 9 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.இந்த படத்தில் கதாநாயகியாக அதாவது நாயகன் அர்ஷித் ஷங்கருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது மலையாள இளம் நடிகை மமிதா பைஜூதான். ஆனால் அவர் நடிக்க விரும்பியும் கதை பிடித்திருந்தும் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை. பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் ஒரு படத்தில் ஏற்கனவே அவர் கமிட் ஆனதால் லவ்வர் பாய் படத்தில் நடிக்க முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in