பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்கும் நடிகை சிம்ரன், தர்மன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? – அந்த நடிகர்தான் சிபாரிசு செய்தாரா? – cinefeeds
Connect with us

CINEMA

பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்கும் நடிகை சிம்ரன், தர்மன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? – அந்த நடிகர்தான் சிபாரிசு செய்தாரா?

Published

on

Actress Simran

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். பல ஸ்டார் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பாக நடிகர் கமலுடன் பம்மல் கே சம்பந்தம் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது கமலுடன் நெருக்கமான நட்பில் சிம்ரன் இருந்ததாக ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் சமீபகாலமாக நடிகை சிம்ரன் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக நடிகர் பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தில் வில்லி நடிப்பில் சிம்ரன் மிரட்டியிருந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா என்ற படத்திலும் சிம்ரன் வில்லியாக நடித்திருந்தார்.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் சிம்ரன் இணைந்து நடித்திருந்தார். ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டரில் நடிக்க இருந்ததும் சிம்ரன் தான். ஆனால் கால்ஷீட் இல்லாததால் சிம்ரன் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் ரஜினியுடன் முதன்முறையாக சிம்ரன் இணைந்து நடித்திருந்தார். ஆனாலும் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே ரஜினி சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர்.

Advertisement

ஆனால் தர்மன் படத்தில் நடிகை சிம்ரனுக்கு மிக முக்கியமான கேரக்டர் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் கமலின் நட்பில் இருந்தவர் சிம்ரன் என்பதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல் என்பதால் சிம்ரனுக்கு இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஏற்கனவே சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிம்ரன் நடிக்க கமிட் ஆன நிலையில் அவருக்கு அட்வான்ஸ் தரப்பட்டுள்ளதால் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்ரனே நாயகியாக தொடர்வதாக தெரிய வந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in