LATEST NEWS
சொந்த நாட்டில் இரண்டாம் இடம் பிடித்தாலும்… வெளிநாட்டில் நாங்கதான் FIRST… மாஸ் காட்டும் லியோவின் வெளிநாட்டு வசூல்…!

தமிழில் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. இப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் படங்களின் வரிசையில் முதல் வாரத்தில் அதிக அளவு வசூல் சாதனை படைத்த படமாக இப்படம் உள்ளது. ஏனெனில் லியோ படம் திரைக்கு வந்த முதல் வாரத்தில் ரூ.461 கோடி உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது
மேலும் திரைக்கு வந்த லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இப்படமானது வசூலில் சாதனைப் படைத்துள்ளது. மேலும் வெளிநாட்டில் படத்தின் வசூல் ஆனது 184 கோடியாகும். இதனை அடுத்து ரஜினி நடித்த 2.O படத்தின் வெளிநாட்டு வசூல் சாதனையை இப்படமானது முறியடித்துள்ளது.
ஏனென்றால் லியோ படமானது வெளிநாட்டு வசூலில் 161 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரஜினிகாந்த் நடித்த 2.O படத்தை விட இப்படத்தின் வசூல் வெளிநாடுகளில் முதலிடத்தில் உள்ளது. மேலும் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க லியோ படம் ரூ. 16 கோடி இன்னும் வசூல் செய்ய வேண்டும் என்று திரைப்பட வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.