LATEST NEWS
நெஞ்சே பதறுதே..! 100 அடி ஆழப் பள்ளத்தில் அசுர வேகத்தில் உருண்டு நொறுங்கிய லாரி.. சமூக வலைத்தளங்களை உலுக்கும் நேரடி வீடியோ காட்சி..!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு நகரில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று, சமீபத்திய பலத்த மழை காரணமாக மண் ஈரப்பதமடைந்து சரிந்ததால் 100 அடி ஆழமுள்ள பயங்கரப் பள்ளத்தில் தலைகீழாக உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து நடந்த சமயத்தில் லாரியின் உள்ளே ஓட்டுநரோ அல்லது மற்ற பணியாளர்களோ யாரும் இல்லாததால், ஒரு பெரிய உயிர்ச் சேதம் அதிர்ஷ்டவசமாகத் தவிர்க்கப்பட்டது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், மலைப்பாதைகளின் ஓரங்களில் உள்ள மண் தளர்ந்து போயிருந்தது. இந்தச் சூழலில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியின் அதீத எடையைத் தாங்க முடியாமல், திடீரென மண் சரிவு ஏற்பட்டு லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தை நோக்கிச் சறுக்கியுள்ளது.
மலைப்பாதையின் செங்குத்தான சரிவில் அந்த லாரி அசுர வேகத்தில் உருண்டு, மரங்கள் மற்றும் பாறைகளில் மோதி நொறுங்கும் இந்தத் திக் திக் காட்சிகள் அங்கிருந்த சிலரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இணையவாசிகளிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.
