LATEST NEWS
காதலை இப்படியும் சொல்லலாமா..? லவ்வர் படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் வீடியோ..!!

நடிகர் மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார்.
ஷான் ரோல்டன் இசையமைத்த லவ்வர் படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாட்கள் செல்ல செல்ல லவ்வர் படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் டாக்ஸிக்காக இருக்கும் காதலன், அவனது செயல்கள் பிடிக்கவில்லை என்றாலும் அவனை காதலிக்கும் காதலி என 90’s கிட் மற்றும் 2k கிட்ஸ் ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருணும், திவ்யாவும் அவ்வபோது கல்லூரியில் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் காதலிக்க தொடங்கிய காட்சிகள் படத்தில் இருக்கும்.
ஆனால் அருணம், திவ்யாவும் காதலை வெளிப்படுத்திய காட்சி படத்தில் இல்லை. அந்த காட்சி இருந்தாலும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் பட குழுவினர் அருண் மற்றும் திவ்யா ஆகியோர் தங்களது காதலை வெளிப்படுத்துமாறு எடுத்து delete செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதனைப் பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.
That’s how Arun & Divya confessed their LOVE ❤️💙❤️💙#DeletedScene from out #Lover !!
Don’t miss to watch the film, now in theatres near you !! pic.twitter.com/EXGYISP8yP— Manikandan (@Manikabali87) February 18, 2024