CINEMA
ரசிகர்களே ரெடியா இருங்க…! இன்று மாலை 5.49 மணியளவில்…. SK படத்தின் முக்கிய அப்டேட்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடைசியாக அயலான் .திரைப்படம் வெளியானது தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளானது ஓரளவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் 80 சதவீதம் நிறைவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பானது முழுமையாக முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. அதன்படி, இன்று மாலை 5.49 மணியளவில் படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் SK ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.