LATEST NEWS
“என்னவளே செத்துட்டா” காதலி இறந்த துக்கத்தில் 19 வயது வாலிபர் எடுத்த அதிர்ச்சி முடிவு… கதறும் பெற்றோர்… இப்படியொரு காதலா..?
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காதலி இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல், 19 வயது வாலிபர் ஸ்ரீகாந்த் என்பவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்காடு தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்தின் காதலி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும், சோகத்திற்கும் ஆளான ஸ்ரீகாந்த், அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம், தனது தாய் புஷ்பராணியிடம் சோடா வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் உடலை மீட்ட ஏற்காடு போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான முழுமையான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
