Uncategorized
பெண்ணாக மாறிய ஆண்.. “ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் ஆபாச பேச்சு..! ‘பின்னர் நடந்த தரமான சம்பவம்’…?

ப்ரியா என்ற பெண் பெயரில் பல சபல ஆண்களிடம் உருகி உருகி ஆபாசமாக பேசி பணம் பறித்த மோசடி பேர்வழி தான் இந்த இளைஞன், லோகென்டோ என்ற டேட்டிங் செயலியில் தனது செல்போன் எண்ணை ப்ரியா, ரூபா என்ற பெயரில் பதிவு செய்து வைத்த ரீகன், ஒரு மணி நேரம் ஆபாசமாக பேச 1000 ரூபாய், வாட்ஸ் அப் மெசேஜுக்கு 500 ரூபாய், நிர்வாண போட்டோ அனுப்ப 100 ரூபாய் என காசு பறித்துள்ளான். இயற்கையாகவே குரல் அச்சு அசலாக பெண் குரலாக இருப்பதால், பெண் என நம்பி சீரியஸாக காதலித்தவர்களும் உண்டு.
ப்ரியாவின் குரலுக்காக மாசம் 5000 ரூபாய் துபாய் இனைஞன் அனுப்பியுள்ளான். ப்ரியா என்ற பெயரில் பணம் பறிக்கும் ரீகனிடம் சல்லாப பேர்வழிகள் வீடியோகாலில் வரச் சொல்லி வரச்சொன்னா போதும் 1500 ரூபாய் அனுப்ப சொல்லி, வாங்கி கொண்டு ஏமாற்றி விடுவான். ஏன் வீடியோகால் வரவில்லை என கோபமாக கேட்டால் , போலீசை கூப்பிடுவேன் என மிரட்டி அவர்களை பயம் உண்டாக்கி ஆஃப் செய்துவிடுவான்.
போலீஸ் இணைய தளத்தில் புகார் அளித்து அதை ஸ்கிரீன்சாட் எடுத்து, தொந்தரவு செய்யும் நபர்களின் செல்போனுக்கு அனுப்பி, புகாரை வாபஸ் பெற எக்ஸ்ட்டாவா துட்டு கேட்டு தனது வங்கி கணக்கையும், கூகுள் பே மூலமும் பணத்தை வசூலித்துள்ளான்.
இப்படி பணம் பறிப்பதற்காக ஆன்லைன் மூலம் கொடுத்த புகார் மட்டும் 500-ஐ தாண்டுகிறது. சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மட்டும் 170 புகார்கள் வெவ்வேறு பெயர்களில் குவிந்துள்ளது. கீழ்பாக்கம் போலீசில் 200-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. ஆன்லைன் மூலம் புகார் வருவதோடு சரி, அதற்கு பிறகு புகார்தாரரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அந்தந்த வழக்குகளை போலீசாரும் முடித்து வைத்துவிடுவார்கள்.
இதனிடையே ஒரே மாதிரியான புகார்கள் ஆன்லைன் மூலம் வருவதால் சந்தேகமான போலீசார் சைபர் கிரைம் பிரிவிற்கு இந்த புகார்களை அனுப்பி வைத்தபோது ஒரே ஐ.பி முகவரியில் இருந்து பல புகார்கள் பதிவாகியிருப்பதை கண்டுபிடித்த போலீசார், ஆன்லைன் புகாருக்கு ஆளான ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, நடந்தவற்றை கூறியுள்ளார்.
ப்ரியா என்ற பெண், தன் மீது கொடுத்த புகாரில் காவல் துறை வழங்கும் ஆன்லைன் சி.எஸ்.ஆர் காப்பியை காண்பித்து மிரட்டி பணம் பறித்ததாக அந்த நபர் கூற இந்த மோசடி நடைபெறுவது அம்பலமானது. அந்த நபரிடம் இருந்த செல்போன் ஆடியோவை கேட்டு, ப்ரியா என்ற பெண்ணை தேடிச் சென்ற போலீசாருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.
பேசிய நபர் பெண் ஆல்ல, ஆண் என்பது தெரியவந்துள்ளது. ப்ரியா என்கிற பெயரில் மோசடி செய்த ரீகனை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், 1000 கணக்கான ஆண்களிடம் இதுபோன்று மோசடி செய்து பணம் பறித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, மோசடி வலையில் சிக்கும் சபல பேர்வழிகளிடம் ஆபாச உரையாடல்களை பயன்படுத்தியும், மிரட்டியும் பணம் பறித்து வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.