LATEST NEWS
சரித்திரத்தில் முதல்முறை..! IAS அதிகாரி இடத்தில் அமைச்சர்.. நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக அமைச்சர் வெங்கட்ரமணன் அதிரடி நியமனம்..!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக அமைச்சர் வெங்கட்ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக இந்த உயர் பொறுப்பில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது மரபாக இருந்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக ஒரு அமைச்சரே நேரடியாக இந்தத் தலைவராக நியமிக்கப்பட்டு தமிழ்நாட்டில் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
அவர் ஏற்கனவே உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருவதால், நுகர்பொருள் வாணிபக் கழகப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்ற அடிப்படையிலேயே அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
