LATEST NEWS
BREAKING: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை.. தமிழ்நாடு முழுவதும் ரூ.82 லட்சம் அதிரடி பறிமுதல்..!!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.82 லட்சம் ரொக்கப் பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மொத்தத் தொகையில், சுமார் ரூ.68 லட்சம் பணம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் தழுவிய இந்த அதிரடி லஞ்ச ஒழிப்பு வேட்டை அரசு ஊழியர்கள் மற்றும் வட்டாரங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
