“அம்மா, ப்ளீஸ் என்னை எப்பிடியாவது காப்பாத்துங்க…” நடுரோட்டில் தாய்-மகள் மீது கொடூரத் தாக்குதல்.. மர்ம கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா, ப்ளீஸ் என்னை எப்பிடியாவது காப்பாத்துங்க…” நடுரோட்டில் தாய்-மகள் மீது கொடூரத் தாக்குதல்.. மர்ம கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில், தன் 12 வயது மகளைக் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய் மீது சில சமூக விரோதிகள் கல்வீசித் தாக்குதல் நடத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜகத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உட்வா கிராமத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. காரைச் சூழ்ந்து கொண்ட கும்பல், ஈட்டிகள் மற்றும் கற்களைக் கொண்டு காரின் கண்ணாடிகளைத் தகர்த்துத் தாக்குதல் நடத்தியதில், காரில் இருந்த தாயும் மகளும் காயமடைந்தனர். இந்த கொடூரத் தாக்குதலின் போது காரின் உள்ளே இருந்த சிறுமி, பயத்தில் நடுங்கியபடி “அம்மா, ப்ளீஸ் என்னை எப்படியாவது காப்பாத்துங்க…” என்று அலறிய நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/DeOdHLaAren/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஜகத்பூர் காவல்துறையினர், உடனடியாகச் செயல்பட்டு முதற்கட்டமாக மூன்று குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். கிராமப் பிரதானின் மகன்களான ரிதேஷ் மிஷ்ரா, சத்யம் மிஷ்ரா மற்றும் சிவம் குமார் மிஷ்ரா ஆகிய மூவரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். பாதிக்கப்பட்ட பெண்மணி அண்மையில் ஒரு தலித் குடும்பத்திற்குப் பக்கபலமாக இருந்து காவல்துறை மூலம் வழக்குத் தொடர உதவியதாகவும், அதற்குப் பழிவாங்கும் நோக்கோடே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in