LATEST NEWS
இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட கமல்ஹாசனுடன் நடிக்காத நதியா…. அவரே கூறிய காரணம்…. என்ன தெரியுமா….????

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல் மற்றும் நதியா கம்மல் என அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாக இருந்தது. பொதுவாக நடிகைகள் சிலர் இரண்டாவது திரைப்படத்தில் கவர்ச்சியில் குதிப்பார்கள்.
ஆனால் தனது இறுதி படம் வரை கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது நதியா மட்டும் தான். இவருக்கு தற்போது 55 வயதாகிறது. ஆனாலும் தனது இளமை குறையாமல் இன்னும் அப்போது இருந்தது போல இளமையாகவே இருக்கிறார். இந்நிலையில் அண்மையில் நதியா ஒரு பேட்டியில், இதுவரை கமல்ஹாசன் உடன் நடிக்காததை ஏன் என்பது குறித்து கூறியுள்ளார்.
அதாவது கமல்ஹாசனுடன் தான் நடிக்காமல் போனது மிகவும் வருத்தமாக தான் உள்ளது. அதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான். கால்ஷீட் பிரச்சனை. அவர் பட வாய்ப்பு வரும்போது வேறொரு படங்களில் நான் இருப்பேன். விக்ரம் திரைப்படத்தில் கூட முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது என நதியா வெளிப்படையாக கூறியுள்ளார்.