LATEST NEWS
சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. சிக்கலில் மாட்டி கொண்ட தயாரிப்பாளர்.. லேடி சூப்பர் ஸ்டார் மார்க்கெட் சரியுமோ..!!

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் பில்லா, ராஜா ராணி, தனி ஒருவன், இமைக்கா நொடிகள், விசுவாசம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் மறுபிறம் பிசினஸிலும் நயன்தாரா பிஸியாகிவிட்டார். சமீபத்தில் நயன்தாரா ஜெய் நடித்த அன்னபூரணி திரைப்படம் திரைக்கு வந்தது.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா தயாரித்துள்ளார். மேலும் சத்யராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுவரை அன்னபூரணி திரைப்படம் குறைந்த அளவு வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு கொடுத்த சம்பளத்தை விட குறைந்த அளவே படம் வசூல் செய்ததால் தயாரிப்பாளர் சிக்கலில் இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா இனி வரும் படங்களில் நடிக்க 11 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரிலீசான அன்னபூரணி திரைப்படம் நல்ல வசூல் பெறாத நிலையில் தயாரிப்பாளர் அதை சரிகட்ட முடியாமல் இருக்கிறார். அப்படி இருக்க நயன்தாரா மேலும் சம்பளத்தை ஏற்றியதால் இனி வரும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.