LATEST NEWS
“இன்னும் 3 மாசம் தான் டைம்!”.. தவெக அமைச்சரவையில் ‘ஆபரேஷன் க்ளீன் அப்’.. அமைச்சர்களை அலறவிட்ட முதல்வர் விஜய்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ள சூழலில், செங்கோட்டையன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் முதன்முறையாகப் பொறுப்பேற்றிருப்பதால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களையும் புகார்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சில துறைகளின் அமைச்சர்கள் தொழில் நிறுவனங்களிடம் பரிசுப் பொருட்கள் கேட்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், ஊழலற்ற ஆட்சியைத் தர விரும்பும் முதலமைச்சர் விஜய் உளவுத்துறை மூலம் அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். தற்பொழுது அமைச்சர்கள் பொறுப்பேற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 3 மாதங்களுக்குப் பிறகு அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, மோசமாகச் செயல்படும் அமைச்சர்களின் பதவிகளைப் பறிக்க விஜய் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளார்.
இந்த 3 மாதக் காலகட்ட கண்காணிப்பில், முதலமைச்சர் விஜய்யிடம் அதிகளவிலான புகார்களைப் பெற்றுள்ளவர்களாகத் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவும், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் முகமது பர்வேஸும் அறியப்படுகின்றனர். இதற்கிடையே, தவெக-வில் இணைந்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள், தற்போதைய அமைச்சர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மூலமாகப் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைக் கைப்பற்றக் காய் நகர்த்தி வரும் விவகாரமும் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. கூட்டணி கட்சி அமைச்சர்கள் உட்பட அனைவரும் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதால், வரவிருக்கும் 3 மாதங்களுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அதிரடி மாற்றம் நடக்கும் என்பது உறுதியாகி, அமைச்சர்கள் அனைவரும் தற்போதே கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
